After fasting, reining in flesh
Not quite able to comprehend
why the crescent moon that she sought for
appeared a bloodstained white shirt
Saira held tight in her heart
Allah the Most Merciful
The Most Compassionate
And did not see the hawks
that gathered around her pot of haleem
Not knowing that shadows of hatred
had lengthened
She covered her head and once again
looked up to see
Bloodstains spread swiftly across the sky
Having swallowed the crescent moon
Hafiz – He who protects
Hafiz – He who holds memory in place
Joyous that her sons were now Hafiz
and ready for Eid
Barely had she ended her fast
when instead of her child
maimed flesh was returned home
Saira looks for protection
in the God of men
Asks for protection
for him who held memory in place.
சாய்ராவின் ரமலான்
ஊனடக்கி வானை நோக்கினால்
ரத்தக்கறைபடிந்த வெண்சட்டையாய்
பிறை தெரிவது
ஏனென்று புரியாமல்
அளவற்ற அருளாளனை
நிகரற்ற அன்புடையோனை
மனதில் இருத்தினாள்.
செய்துவைத்த ஹலீமின்மேல்
மொய்த்துக் கொண்டிருக்கும்
வல்லூறுகளை பார்க்கவில்லை.
வெறுப்பின் நிழல்கள்
படர்வது தெரியாமல்
முக்காட்டினை அணிந்து வந்து
மீண்டும் வானை நோக்கினாள்
ரத்தக்கறைகள் பிறையை முழுங்கி
வானில் பரவும் வேகத்தை
ஹஃபிஸ் – காத்து வருபவர்
ஹஃபிஸ் –நினைவில் நிறுத்துபவர்
ஈந்த தன் மகன்கள்
ஹஃபிஸான பேருவப்பில்
ஈகை கொண்டாட இருந்தவள்
நோன்பு முடிக்க பிள்ளைக்குப் பதிலாய்
பிள்ளைக் கறி வந்துசேர
மனிதர்களின் இறைவனிடத்தில்
சாய்ரா காவல் தேடுகிறாள்.
நினைவில் நிறுத்திக் காத்தவனுக்கு
காவல் தேடுகிறாள்.
Read Manash Firaq Bhattacharjee's poem on Hafiz Junaid here.