Tamil Nadu has been a hotbed of confrontation between a trigger-happy state and citizens protesting against the government's corporate welfare policies, industrial pollution and the forcible alienation of natural resources and farmland.
Jananaayagam (Democracy) is a musical reminder to the State that India is a country governed by a Constitution that protects dissent and celebrates democracy. It is an invitation to the State to abandon its corporate masters and stand by the people.
பதவியில் இருக்கும்
அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
ஒரு அன்பார்ந்த வேண்டுகோள்
தயவு செய்து செவி சாய்க்கவும்.
நன்றி!
இது ஜனநாயகம்!
உன் அரசியல் நாடகம்!
பதவி ஏத்திவிட்டா…
அற செயல் செய்யணும்!
இது ஜன நாயகம்!
மனதில் நினைவிருக்கட்டும்!
நீ எங்கள் சேவகன்தான்…
ஏன்னா நாங்க தான ஜனம்!
மொதல்ல ஓட்ட கேட்டு வட சுட்ட… மணிச்சோம்!
பின்ன பதவில காச சுட்ட… சகிச்சோம்!
நாங்கள் போராடினோம் ஆள சுட்ட!
அவளோ நீ துணிஞ்சிட்ட?
நீ அமர்வது நாற்காலி! சிம்மாசனம் இல்லை!
பொறுப்ப தானே நாங்க தந்தோம், உன்ன மன்னன் ஆக்கள!
எங்களுக்கு மாசான நீர், நிலம், காற்று வேண்டாம்!
வணிகம், காசுன்னு நீ ரீல சுத்த வேண்டாம்!
மொதல்ல நாங்க பேசவரும்போது காத குடுத்து கேளு!
சும்மா போலீஸ் வெச்சு கைய ஓங்க நீங்க யாரு?
கேள்வி கேட்டா, முணுங்குற.
உண்மையை நீ முழுங்குற.
சட்டம் காக்க தானே நீங்க…
அத ஏங்க மறந்தீங்க?
இது ஜனநாயகம்!
உன் அரசியல் நாடகம்!
பதவி ஏத்திவிட்டா…
அற செயல் செய்யணும்!
இது ஜன நாயகம்!
மனதில் நினைவிருக்கட்டும்!
நீ எங்கள் சேவகன்தான்…
ஏன்னா நாங்க தான ஜனம்!
தூத்துக்குடி மட்டும் இல்லை.
உன் கூட்டு சதியின் இடம்
ஸ்டெர்லைட் மட்டும் இல்லை!
உன் கூட்டாளியின் முகம்
எண்ணூருள, டெல்ட்டாவுல, கூடங்குளத்திலும்,
வளர்ச்சினு சொல்லி கொள்ளை அடிக்கிற தெனமும்!
நீ கொள்ளை போக விடுறது
இயற்கை வளம்!
சொரண்டிட்டா ஊரு வெறும்
வறண்ட நிலம்!
வாழ்வாதாரம் அழிக்கிறாய்!
வாழ்வுதாரம் கொரைக்கிறாய்!
எதிர்காலம் சிதைக்கிறாய்!
கேள்வி கேட்டா ஜெயில்ல அடைக்கிறாய்!
நீ சீன் போட்டா பயப்பட
தமிழன் நா கொக்கா?
மக்களாட்சி மறந்திட
மக்கள் என்ன மக்கா?
கம்பெனி முதலாளிட்ட
முடியாது சொல்லு!
அராஜகம் நிறுத்தி
வந்து எங்க பக்கம் நில்லு!
இது ஜனநாயகம்!
உன் அரசியல் நாடகம்!
பதவி ஏத்திவிட்டா…
அற செயல் செய்யணும்!
இது ஜன நாயகம்!
மனதில் நினைவிருக்கட்டும்!
நீ எங்கள் சேவகன்தான்…
ஏன்னா நாங்க தான ஜனம்!
CREDITS:
Starring Guru Somasundaram & Varun
Song: Concept: Nityanand Jayaraman
Lyrics: Kaber Vasuki & Nityanand Jayaraman
Composer: Kaber Vasuki
Programmers: Kaber Vasuki, Siennor, Dilip V
Mix & Master: Dilip VVideo:
Director & Editor: Aditya Balaji
Script Supervisor: Adithya Seshadri Suresh
Executive Producer: Akash Kumar
Project Producers: Satwik Gade, Sudarshan Raghunathan, Archanaa Seker
Cinematographer: Sandeep K
Assistant Cinematographer: Naresh Kumar
Focus Puller: Agnishwaran
Vmc : Guna & Satish
Colorist: Balaji Gopal
Conformist: Sri Vijay Ranganathan
Vfx & Compositing: Goutham Selvaraj & Akash Kumar
Make Up: Sneha Manoj assisted by Niruthya Gayathri Murugesan
Art Director: Satwik Gade
Sound Design & Mix: Nishok Kumar
Sound Recorded & Mixed At: Studio Hertz
Special Thanks To: Karthik G Akshay, Arjun Durai, Santosh, Satya VA Justice Rocks initiative
Video produced by Banao Creatives.